வடபகுதிக்கு தொழில் நிமிர்த்தம் வந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Saturday, October 10th, 2020

தென்னிலங்கையில் இருந்து வந்து வடக்கு மாகாணத்தில் கட்டுமானப் பணிகள், வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களையும் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத் தொடர் கண்காணிப்புக்குள் கொண்டுவர வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி வென்னப்புவ பிரதேசத்தில் இருந்து இரு வாரங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிக்கு வந்தவராவார். இதனால் அப்பகுதியில் இருந்து வடக்கு மாகாணத்தின் எப்பகுதியிலேனும் எந்தப் பணிக்காகவேனும் தொழிலாளர்கள் வந்திருப்பின் அவர்கள் அனைவரையும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவ்வாறானவர்களை இனங்காணும் நடவடிக்கை மிக வேகமாக இடம்பெறுகின்றது. பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: