ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி படுகொலை!

Saturday, November 28th, 2020

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில் அவரது வாகனத்தில் வைத்து அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் ஃபக்ரிசாதேவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடனர் தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஈரானிய விஞ்ஞானி பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராக தற்போது பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர் மாநாடொன்றில் குறித்த ஈரான் விஞ்ஞானியின் பெயரை நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் குறிவைத்து தொடர்ச்சியான கொலைகளை இஸ்ரேல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கொலை குறித்தும் இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன் விஞ்ஞானியின் கொலை குறித்து கருத்துக்கூற இஸ்ரேல் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: