ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 436 பேரிடம் விசாரணை – ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி பொலிஸ் பிரிவு இதுவரை 1500 க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் அது தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இந்த ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் இதுவரை இரண்டு சந்தர்ப்பங்களில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரையில் நீடிக்கப்பட்டுளளது.

இந்நிலையில் பொலிஸ் பிரிவில் 1,570 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 436 பேரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: