புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி திறந்துவைப்பு!

Monday, March 19th, 2018

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று  (19) திறந்துவைத்தார்.

யுhழ்.ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இன்று காலை 9.30 மணியளவில், யாழ்.பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற போது, ஜனாதிபதி ஆய்வுகூடத்தினை நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகை திரை நீக்கத்தினையும் செய்து வைத்தார்.

புற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3 கோடி ரூபா நிதியில் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016 ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு, கதிரினால், மல்கம் ரஞ்சித் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: