கடல் எல்லைக்கள் நுழையும் சட்டவிரோத படகுகளுக்கு அபராதம் 17 கோடி!

Tuesday, November 29th, 2016

இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு 17 கோடி ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக பிரவேசிக்கும் தென்இந்திய மீன்பிடி படகுகள் உள்ளிட்ட வெளிநாட்டு படகுகள் மீது 30 லட்சம் ரூபா முதல் 17 கோடி ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதற்காக நாட்டின் சர்வதேச மீன்பிடிச் சட்டத்தை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு எவ்வித அபராதமும் இதுவரையில் விதிக்கப்படவில்லை.

மீன்பிடிப்படகுகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டு வந்தது.எதிரும் காலங்களில் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குறித்த படகுகளை விடுவிப்பதற்கு உண்மையான உரிமையாளர்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் உள்நாட்டு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

pakship_2381667g

Related posts: