உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை வருகை!.

Wednesday, December 27th, 2023

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி பயணங்களை மேற்கொள்கிறார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, தாம், இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு செல்லவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் அவரது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கடன் மறுசீரமைப்பு குறித்து அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம், ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குநர் குழு இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் என்பன தொடர்பில் அடிப்படை உடன்பாட்டை எட்டியிருந்தன.

இந்தநிலையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிலையான முன்னேற்றத்தை அடைவது முக்கியமானது என ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: