அரசுக்கு அதிகாரம் இல்லை -சுசந்திக்கா ஜெயசிங்க!

Sunday, June 11th, 2017

விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என சுசாந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்

கடந்த 2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றவர் சுசாந்திக்கா ஜெயசிங்க. வறுமை காரணமாக தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை விற்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பதக்கத்தை விற்பதற்கு சுசந்திக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை, சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்ற பதக்கங்களை விற்க முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என சுசாந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார். மேலும் பதக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்ததும் ஜப்பான், இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பலர் தொடர்பு கொண்டதாகவும், அவர்களில் ஒருவர் 25 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதிக விலைக்கு விற்க முடியாது என தான் நம்புவதாகவும், விளையாட்டு அமைச்சின் சில அதிகாரிகள் அமைச்சரை தவறாக வழிநடத்தி செல்வதே அமைச்சரின் கருத்துக்கு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts: