கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Friday, October 7th, 2016

இலங்கையின் கடலுணவு பொருட்களை இந்திய கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, பதனிட்டு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு யாழ்.மாவட்ட கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்திய கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் உள்ள கடலுணவுகளை எடுத்து சென்று இந்தியாவில் அவற்றை பதனிட்டு விற்பனை செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றது.  ஏற்கனவே இலங்கையின் கடல்வளத்தை இந்திய இழுவை படகுகள் அபகரித்துவரும் நிலையில் இலங்கை மீனவர்கள் போதியளவு கடலுணவை உற்பத்தி செய் ய முடியாத நிலையில் உள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

இந்நிலையில் வளத்தை அடிப்படையாக கொண்டு புதிய நிறுவனங்களை அரசாங்கம் உள்ளீர்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதுடன், இவ்வாறா ன நிறுவனங்களால் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை என யாழ்.மாவட்ட கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் ஊடாக கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதி பணிப்பாளர் ஆகியோருக்கு கையளித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: