ஐந்தாம் தரப்  புலமைப் பரிசில் பரீட்சை குறிப்பிட்ட பாடத்தை மாத்திரம் மையப்படுத்தியதாகவேயுள்ளது: கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்!

Monday, October 10th, 2016

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளைப்  போட்டியிட்டுத் தயார்படுத்தி வருகின்றனர். ஐந்தாம் தரப்  புலமைப் பரிசில் பரீட்சை குறிப்பிட்ட பாடத்தை மாத்திரம் மையப்படுத்தியதாகவேயுள்ளது.

ஆகவே தான் மாணவர்களின் திறமையைப் பல்வேறு வகையிலும் அளவிடும் முகமாக  அறநெறிக் கல்வி, விளையாட்டு, கலை. கலாசாரங்கள் ஆகிய துறைகளில் தனித்தனியாகப் புள்ளிகள் இடப்பட வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.  இது நல்லதொரு ஆலோசனையாகும் எனத் தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுடாக இந்து சமய அறநெறிக் கல்வியை வளர்த்தெடுக்கும் திட்டத்தின் ஒரு அம்சமாகக் கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கொக்குவில் மஞ்சவனப் பதி முருகன் அறநெறிப் பாடசாலை நேற்று  ஞாயிற்றுக்கிழமை(09) கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணனினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன் போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் பாடசாலைகளில் கட்டாயம் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்பட்டு அதன் மூலம் சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவரையும் நெறிப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆவலாகவிருக்கிறோம். இதற்கான சுற்று நிரூபமொன்றை இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விரைவில் அனுப்பத் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

unnamed (1)

Related posts: