ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் – அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!

Monday, April 1st, 2024

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் எனவும் ஏப்ரல் விடுமுறையின் பின்னர் அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்பப் பிரிவுகளின் கீழ் 2,700 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான ஆசிரியர் பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் அவர்களின் பெறுபேறுகள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என்றும் இவர்களுக்கு கல்வி அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்களுக்கு அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்கள் தொடர்பில் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: