பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Tuesday, June 14th, 2016

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ள அவர்  போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் வண்டி சாரதிகளும் இந்த அனுமதிப்பத்திரத்தை பெறுவது கட்டாயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளினால் ஏற்படும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – விரைவில் பாடசாலைகள்...
நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி – நிதி அமைச்சரினால் அதிவிசெட வர்த்தமானி வெளியீ...
அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் த...