நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி – நிதி அமைச்சரினால் அதிவிசெட வர்த்தமானி வெளியீடு!

Saturday, August 14th, 2021

நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட பொருட்கள் வரி சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ கருவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு 100 ரூபாய் வரியும் வெந்தயம் ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாய் வரியும் குரக்கன் மா ஒரு கிலோவிற்கு 150 ரூபாய் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடுகு ஒரு கிலோ கிராமுக்கு 62 ரூபாய் வரியும் உப்பு ஒரு கிலோ கிராமுக்கு 40 ரூபாய் வரியும் பட்டர் ஒரு கிலோ கிராமுக்கு 880 ரூபாய் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: