ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொலை வழக்கு – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!
Thursday, February 3rd, 2022
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


