ஊடக பேச்சாளருக்கு பதவி உயர்வு!
Tuesday, September 19th, 2017
இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்னவுக்கு கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் தர பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர வெளிநாட்டு பயிற்சிக்கு சென்றதை அடுத்து பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.
திருகோணமலையில் நீர்காகம் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது செனவிரத்ன மேஜர் ஜெனரல் தர பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இராணுவ ஊடகப் பேச்சாளராகவும், முப்படைகளின் பேச்சாளராகவும் ரொஷான் செனவிரத்ன கடமையாற்றி வருகிறார்.
Related posts:
டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
சிறுதானியப் பயிர்ச் செய்கையால் பெரும் விளைச்சல்!
கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர் சுதர்சனி!
|
|
|


