டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

Thursday, August 31st, 2017

டெங்கு நோய் பரவுவது குறைவடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிமாக செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் 26ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதன் தேவையை குறித்த பிரிவைச் சேர்ந்த வைத்தியர் பிரசீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பமாவதினால் சுத்தம் செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

2017ஆண்டில் இதுவரையில் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் 40 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இந்த மாதத்தில் இதுவரையில் 16ஆயிரம் டெங்கு நோயாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கு காரணம் டெங்கு நோய் தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் என்றும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது

Related posts: