வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை முடிவிற்கு வந்தது?

Wednesday, November 2nd, 2016

மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது மன்றில் தோன்றி குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி, வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

முடிக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த வழக்கின் விசாரணையினை எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரைக்கும் ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

vithya

Related posts: