50 சதவீதமான சிறுவர்களுக்கு விற்றமின் D குறைபாடு – சுகாதார அமைச்சு!

Sunday, November 24th, 2019

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் 50 சதவீதமானவர்களுக்கு விற்றமின் D உயிர்ச்சத்து குறைபாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

பொரளை வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவின் விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ இது தொடர்பாக தெரிவிக்கையில் இந்த குறைபாடு பல நோய்களுக்கு காரணமாக அமைவதாக தெரிவித்தார்.

விற்றமின் D குறைபாட்டை தவிர்ப்பதற்கு காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிக்கிடையில் சூரிய ஒளியில் இருப்பது அத்தியாவசியம் ஆகும் என்று டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Related posts: