உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாது – அநுர தெரிவிப்பு?
Sunday, December 4th, 2016
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகாரப்படுத்தப்பட்ட முறைமையின் கீழ் நடத்தப்பட்டால், தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாது என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பிரதான இரண்டு அரசியல் கட்சிகளைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகளை ஓரம் கட்டும் சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. புதிய தேர்தல் முறைமையின் ஊடாக பிரதான இரண்டு கட்சிகளின் பலத்தை மேலும் உறுதிப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகின்றது. மக்களால் உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் உரிமை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டுள்ளதுள்ளதோடு, புதிய அரசியல் சாசனத்துடன் புதிய தேர்தல் முறைமையை அறிமுகம் செய்ய முயும்.
அனைத்து அரசியல் கட்சியும் பாதுகாக்கப்படும் வகையில் தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென பேசப்பட்டுள்ளதுடன் இதற்கு பிரதமரும் இணங்கியுள்ளார். பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்

Related posts:
|
|
|


