பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020

விமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் பாதுகாப்பை போன்று மாணவர்களின் வாழ்க்கையின் முக்கிய காரணியாகக் கருதி அதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்பற்ற விதத்தில் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

கடந்த 23 ஆம் திகதி தான் பாடசாலைகளை ஆரம்பித்தோம். இதுவரை மூன்று நாட்கள் கடந்துள்ளன. 23ஆம் திகதி 33 சதவீத மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தனர். 24ஆம் திகதி இத்தொகை மேலும் அதிகரித்தது இது 45 சதவீதமாக அமைந்திருந்தது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் நாள் பாடசாலை மாணவர்களின் வரவு 51 சதவீதமாக அமைந்து. ஆசிரியர்களின் வருகையும் 82 சதவீதமாக அமைந்திருந்தது. ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சென்று தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்மூலம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு நாட்டில் தொடர்ச்சியாக வரவேற்பு உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது என்பது பெரும் சவால் மிக்க ஒன்றாக இருந்தபோதிலும் பெற்றோர்கள் இந்த சவால்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் ஆர்வமாக உள்ளனர். பெற்றோர் இதனை உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளனர். பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைத்திருக்க வேண்டாம் என்றும் முடிந்தவரை அவற்றைத் திறந்து மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நாட்டில் 10 ஆயிரத்து 165 பாடசாலைகள் இருக்கின்றன இவற்றுள் ஐயாயிரத்து 500 பாடசாலைகளை 23 ஆம்திகதி ஆரம்பித்தோம். நடைமுறைப்படுத்தும் பொழுது குறைபாடுகள் இருக்கக்கூடும் பிரச்சினை ஏற்படும் உடன் அவற்றுக்கு பொருத்தமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். பெற்றோர் ஆசிரியர்கள் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வமாகவுள்ளனர்.

அரசாங்கம் என்ற ரீதியில் எமது கொள்கை இதுவாகும். இந்த விடயம் எமது நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் நிலவுகின்ற ஒரு பிரச்சினையாகும். சர்வதேச ரீதியிலான ஒரு சவாலாக இந்த விடயம் அமைந்துள்ளது என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: