க.பொ.த சாதாரண தர பரீட்சை : பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி பூர்த்தி!

Monday, November 19th, 2018

நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 395,000 அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 392,000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் அறியப்படுத்துமாறும் அத்துடன் இதுவரை அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் உடனடியாக உரிய ஆவணங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வருடங்களைவிட இம்முறை தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு தனியொரு தினத்தை ஒதுக்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: