சமுர்த்தி திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஒரு திட்டமல்ல – கிடைக்கும் காலத்தில் உங்களை சரியாக வழப்படுத்திக் கொள்ளுங்கள் – யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சுதர்ஷன் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022

சமுர்த்தி திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஒரு திட்டமல்ல. அந்த திட்டம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் காலத்தில் அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வழப்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சுதர்ஷன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிநடத்தலில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் ஆலோசனையின் கீழ் சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை மேலதிகமாக நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்கும் செயற்றிட்டம் இன்றையதினம் நாடு முழுவதும்  நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக யாழ் நகர் மேற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் பிரதீபன் தலைமையின் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடு கடுமையான நிதி நெருக்கடிக்குள் இருக்கும் சூழல் ஒருபுறமிருக்க எதிர்த்தரப்பினரது கடுமையான பொய் பிரசாரங்களுக்கு மத்தியில் மக்களின் நலன்களை மையப்படுத்தி இந்த திட்டத்தை எமது நாட்டின் அரச தலைவர் இன்றையதினம் நடைமுறப்படுத்தியுள்ளமை நாட்டு மக்கள் மீது அரசாங்கம் கொண்டுள்ள பற்றுறுதியைகாட்டுவதுடன் அதற்காக அனைவரும் நன்றி கூறவேண்டிய விடயமாகவும் அமைந்துள்ளது என பயனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் சமுர்த்தி திட்டமானது 1994 ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரனாயக்க குமாரதுங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் அது வடபகுதிக்கு குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கு கிடைப்பதில் பெரும் இழுபறி நிலை இருந்து வந்தது.

ஆனாலும் அன்று அந்த அரசாங்கத்துடன் கதைத்து அத்திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கும் கிடைக்கச் செய்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பது மக்களுக்கு மட்டுமல்லாது சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் நன்கு தெரியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்று எடுத்த இந்த முயற்சியானது இன்று எமது மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தை தந்துள்ளது.

அத்துடன் அந்த வரப்பிரசாதத்தை தொடர்ந்தும் நீங்கள் மட்டும் பெற்றுக்கொள்ளாது ஏனைய மக்களும் இதனை பெற்றுக்கொள்ள வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நீங்கள் பாதையமைத்து கொடுப்பதற்கும் அனைவரும் முன்வரவேண்டும் எனவும் பயனாளிகள் கூட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு நூற்றுக்கு 28 சதவீதமாக அரசாங்கம் அதிகரிக்க தீர்மானித்திருந்தது.

இதற்கமைய 28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், இன்று 14 ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது..

அதனடிப்படையில் நாட்டில் 17 இலட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறுகின்றன . அதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 3,500 ரூபா கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கான தொகை 4, 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இதுவரையிர் 2,500 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொண்ட குடும்பமொன்றுக்கு 3,200 கொடுப்பனவு வழங்கப்படும் அதேநேரம் 1,500 ரூபா பெற்ற குடும்பத்துக்கு 1,900 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், இன்றுமுதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 28 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கையால் அரசாங்கம் மேலதிகமாக 15,000 மில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: