உரத்தின் விலையை அதிகரித்து விற்போர் மீது கடும் நடவடிக்கை!

Wednesday, May 16th, 2018

விவசாயிகளுக்கான உரத்தின் விலையை அதிகரித்து விற்பனை செய்வோர் பற்றிய தகவல்களை விவசாய அமைப்புக்கு அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் உர மோசடியை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு 011-288744 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு உரத்தின் விலையை அதிகரித்து விற்போரின் தகவல்களை அறிவிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரமானியத்தின் அடிப்படையில் கமநல சேவை நிலையங்கள் ஊடாக 50 கிலோகிராம் கொண்ட உரமூட்டை 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

தனியார் உர வியாபாரிகளிடமிருந்து உரத்தை கொள்வனவு செய்வோர் 50 கிலோகிராம் கொண்ட உரமூட்டையை 1500 ரூபாவுக்கு நாடளாவிய ரீதியில் கொள்வனவு செய்ய முடியுமென இதற்கான பற்றுச்சீட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

பற்றச்சீட்டுகள் இன்றி கமநல சேவை நிலையம் மற்றும் தனியார் வியாபாரிகளிடமிருந்து உரத்தை கொள்வனவு செய்ய வேண்டாமெனவும் பற்றச்சீட்டுகள் இன்றி ஓரிடத்திலிருந்து மற்றுமோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாமெனவும் விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts:

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடியில் மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமை...
புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் - சுகாதார அதிகாரி எச்சரிக்கை!
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!