கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடியில் மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் சுட்டிக்காட்டு!

Tuesday, April 6th, 2021

2015ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் வாகன இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

குறித்த நல்லாட்சி காலப்பகுதியில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 25 இலட்சத்து 15 ஆயிரத்து 546 என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாகன இறக்குமதிக்காக ஆயிரத்து 239 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு 103 நாடுகளிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: