உணவுவிழா இஸ்லாமபாத்தில் ஆரம்பம்!

இலங்கை உணவுவிழா நாளை 3ஆம் திகதி பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தில் ஆரம்பமாகின்றது .
பாகிஸ்தானில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாகஇஸ்லாமபாத் மறியெற் ஹோட்டலில்[Marriott Hotel ] நடைபெறவுள்ளது.
இவ் விழாவின் பிரதான நோக்கம் இலங்கையின் கலாச்சார உணவுவகைகளை பிரபல்யப்படுத்துவதேயாகும்.
இஸ்லாமபாத்திலுள்ள மறியெற் ஹோட்டல் தலைமை சமையலாளர்களுடன் இணைந்து இலங்கையின் தலைமை சமையலாளர் செய்க் டாவூட் முகமட் சப்றாஸ் உணவுத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு - மதுரை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!
அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை - மாந...
|
|