யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை – மாநகர சுகாதார தரப்பினர் அதிரடி நடவடிக்கை!

Monday, November 2nd, 2020

யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுட்டுள்ளதாக சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணித்தல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்று நீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக  அனைவரும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும் என்றும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன்  யாழ் மாநகர எல்லைக்குற்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று 2 ஆம திகதிமுதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுகின்றது என்றும் யாழ் மாநகர சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகிக்க வேண்டாமெனவும், உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாகத் தவிர்க்குமாறு பொது மக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நடைமுறைகளை மீறும் உணவகங்கள்  யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினரினால் அடையாளப்படுத்தப்படுமிடத்து உரிய கடை நடத்துனர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், உணவகங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: