உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவாரத்தில் ஒன்பது பேருக்கு டெங்கு !

Monday, March 13th, 2017

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள ஒன்பது டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன், ஏழாலை, சுன்னாகம், இணுவில் ஆகிய பகுதிகளிலேயே குறித்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்தில் ஒன்பது டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts: