கடலாமை இறைச்சி , முட்டைகளை வைத்திருந்த ஐவர் கைது!
Tuesday, February 7th, 2017
கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் என்பவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த 5 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 6.5 கிலோகிராம் கடலாமை இறைச்சி மற்றும் 2.5 கிலோகிராம் கடலாமை முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை பூநகரி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Related posts:
850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றம்!
அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது கிளிநொச்சியில் நடவடிக்கை - சோதனை நடவடிக்கை தொடரும் என்கிறது விலை...
மூவர் கைது – அச்சுவேலியில் தப்பிச் சென்ற ஐந்து பேரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!
|
|
|


