அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது கிளிநொச்சியில் நடவடிக்கை – சோதனை நடவடிக்கை தொடரும் என்கிறது விலைக்கட்டுப்பாட்டு விரிவு!

Thursday, April 16th, 2020

கிளிநொச்சி மாவட்டத்தில் பாவனைக்குதவாத மற்றும் அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன்குளம் மற்றும் ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் குறித்த விசேட சோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விற்பனை செய்யப்பட்டுவந்த காலாவதியான பெருந்தொகை சீனி மீட்கப்பட்டதுடன், தகவலிடப்படாத பொருட்களும் விலைக்கட்டப்பாட்டு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டது.. அத்துடன் பொதிகளில் அச்சிடப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டமையும் அடையாளம் காணப்பட்டதுடன், தகவலிடப்படாத லஞ்சீற்றுகள் மற்றும் உணவு பொதிகளும் விலைக்கட்டுப்பாட்டு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டது.

குறித்த வர்த்தகர்கள் மீது நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

.குறித்த நடவடிக்கையை விலைக்கட்டப்பாட்டு பிரிவினர், மாவட்ட செயலகம், பொலிசார், பொது சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: