தொடர் மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Tuesday, May 17th, 2016

மழை வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் பபா பலிஹவடன மக்களிடம் கோரியுள்ளார்.ஊடகங்களின் ஊடாக அவர் பொதுமக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அதிக மழை வெள்ளம் காரணமாக வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கமாலை, வாந்திபேதி போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிகளவில் இந்த தொற்று நோய்கள் பரவக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.மழை வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கொதித்து ஆறிய நீரையே பருக வேண்டும்.மலசல கூடங்களை பயன்படுத்திய பின்னர் நன்றாக சவர்க்காரம் இட்டு கைகளை கழுவிக் கொள்ள வேண்டும்.ஈக்கள் அதிகமாக மொய்க்கக்கூடிய இடங்களில் இருக்கக் கூடாது என மருத்துவர் பலிஹவடன கோரியுள்ளார்.

Related posts: