உடுப்பிட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்!
Saturday, June 11th, 2016
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (10.06.2016) காலை-9 மணி முதல் 11 மணி வரை உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத் தலைவர் எஸ். தயானந்தம் மருத்துவக் குழுவினர்களை வரவேற்று “மருத்துவ முகாமின் அவசியம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மேற்படி மருத்துவ முகாமுக்குத் தலைமையேற்று வந்திருந்த வைத்திய கலாநிதி ம. அரவிந்தன் (அகஞ்சுரக்கும் தொகுதியியல் நிபுணர்) தொற்றா நோய்கள் தொடர்பான கருத்துரையை நிகழ்த்தினார்.
இந்த மருத்துவ முகாமில் 40 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். .
Related posts:
என்னை துரோகி என்றால் இலங்கை கிரிக்கட் சபையை எப்படிச் சொல்வது!
பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
இலாபமீட்டும் பேருந்து சாலையாக மாற்றும் பொறுப்பை வடக்கு மக்கள் நிறைவேற்றுவார்கள் - அமைச்சர் பந்துல கு...
|
|
|


