இலுப்பையடி சந்தியில் தேங்கும் மழைநீர் – பயணிப்போர் சிரமம்!
Tuesday, September 12th, 2017
யாழ் நகரில் இலுப்பையடி சந்திக்கு அருகில் நாவலர் வீதி பக்கமாக மழை வெள்ளம் தேங்குவதால் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வீதியில் வெள்ளம் வழிந்தோடுவதற்கு வசதியாக வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. இதனாலேயே வீதியில் வெள்ளம் தேங்கி நிற்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பலாலி வீதியின் இலுப்பையடி சந்தி பக்கமாகவுள்ள பகுதியிலே மழைகாலங்களில் வெளளம் வழிந்தோட முடியாது தேங்கி நிக்கின்;றது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அவ் வீதியால் நடந்து செல்லும் மக்கள் பெரிதும் பாதுக்கப்பட்டுயள்ளனர்.
தற்போது இடையிலடையே பெய்யும் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையிடையே பெய்யும் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நிலையில் இனிவரும் பருவமழையின் போது இவ்விடத்தால் போக்குவரத்து செய்ய முடியாதவாறு வெள்ள நீர் தேங்கும் சூழல் காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


