வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் – கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023

2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 20 அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்களும், 30 மயக்க மருந்து நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளரும் வைத்தியருமான அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் விசேட வைத்தியர்களின் பயிற்சி நெறிக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் கோப் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலம் 63 வயது வரை நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பிரேரணையின் மூலம் அறிவித்துள்ளார்.

60 வயதில் மருத்துவ நிபுணர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்து கோரி 176 மருத்துவ நிபுணர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்கும் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: