இலவசக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
Saturday, March 4th, 2017
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழக யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் நடைபெறவுள்ள இலவசக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த பல்கலைக் கழகத்தினால் நீரியல் வள முகாமைத்துவ டிப்புளோமா, மிதவைக் கப்பல் இயந்திரப் பொறியியலாளர், வெளி இணைப்பு இயந்திரப் பொறியியலாளர், கடலக மாலுமிப் பயிற்சி நெறி, சுழியோடிப் பயிற்சி நெறி, உயிர் பாதுகாப்புப் பயிற்சி நெறி, கடலக வரைபடம் வாசித்தலும் செய்மதி தொடர்பாடலும் ஆகிய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்படி கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்களை இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் - அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்த...
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு - இரு குழுக்களைத் தவிர மற்றய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து - நாடாளுமன்...
மத்தள விமான நிலையத்தை மறுசீரமைக்க நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
|
|
|


