இலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு!
Tuesday, December 11th, 2018
இலங்கைக் கடவுச்சீட்டு, சர்வதேச வகைப்படுத்தலில் தரம் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை விட 9 இடங்கள் முன்னேறி இந்த வருடம் 84 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
விசாவின்றி நாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு, வருகைதரும் வாய்ப்பு மற்றும் அந்நாட்டின் மனிதவள அபிவிருத்தி சுட்டெண் ஆகியவை இந்த வகைப்படுத்தலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இலங்கைக் கடவுச்சீட்டின் ஊடாக 16 நாடுகளுக்கு விசாவின்றி பயணிக்க முடிவதோடு இந் நாட்டுக்கு வந்து விசா பெறக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 29 ஆகும்.
எனினும் இலங்கைக் கடவுச்சீட்டின் ஊடாக 153 நாடுகளுக்கு செல்ல விசா அனுமதி பெறவேண்டும்.
சர்வதேச வகைப்படுத்தலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடவுச்சீட்டு முதல் இடத்தில் உள்ளதோடு அந் நாட்டின் கடவுச்சீட்டு ஊடாக 127 நாடுகளுக்கு விசாவின்றி பயணிக்க முடியும்.
இதில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்திலும் ஜேர்மன் கடவுச்சீட்டு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
Related posts:
|
|
|


