இலங்கை கடற்படைக்கு எதிரான மனு இந்திய நீதிமன்றால் தள்ளுபடி!

Saturday, October 8th, 2016

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என, வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்த முருகன் கடந்த 2014ம் ஆண்டு பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.  தமிழகத்தின் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானதாக கருதப்படும், கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு ஒருதலைப்பட்சமாக தாரை வார்த்தது என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்ட வேளை, தமிழக மீனவர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, அரச தரப்பில் கூறப்பட்டது. விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

1357390194court2

Related posts: