இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா மரணங்கள் – மொத்த உயிரிழப்பு 73 ஆக உயர்வு!
Friday, November 20th, 2020
இலங்கையில் இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் 70,86 வயதுடைய ஆண்கள் என்றும் மற்றய இருவரும் 27,59 வயதுடைய பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்களென்றும் மற்றய இருவரும் களுத்துறையைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இலங்கையில் கொரோனா மரணங்களின் தொகை 73 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் மேலும் 194 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று மட்டும் 437 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18839ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக துணியினாலான பைகள்!
தேசிய விருது வென்ற முல்லைத்தீவு இளைஞர்!
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக பிரகடனம்!
|
|
|


