தேசிய விருது வென்ற முல்லைத்தீவு இளைஞர்!
Tuesday, December 5th, 2017
இலங்கையின் தேசிய விருதினை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வென்றுள்ளார்.
ஆண்டு தோறும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் தேசிய இளைஞர் விருது போட்டி இம்முறை 39 ஆவது தடவையாக நடைபெற்றது.
இதில் சிறுகதை எழுதும் போட்டியில் புதுக்குடியிருப்பில் உள்ள மல்லிகை இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜெ.ஜெகன் எனும் இளைஞர் தேசிய ரீதியில் முதலிடம்பெற்றுள்ளார்.
அண்மையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற தேசிய இளைஞர் விருது வழங்கல் நிகழ்வில் இவருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றின் கோரத் தாண்டவம்: செய்வதறியாது தடுமாறும் அமெரிக்கா!
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பு எச்சரிக்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் விசேட சந்திப்பு – இலங்கையின் பொருளாத...
|
|
|


