சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறை!
Sunday, March 11th, 2018
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Related posts:
தீர்க்கதரிசனத்தோடு மக்களுக்காக பணியாற்றிவருபவர் டக்ளஸ் தேவானந்தா - தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தின...
இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம் – ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் சிக்கல் வராது – அமைச்சர்...
நாடு திரும்பினார் பசில் ராஜபக்ச - மீண்டும் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்!
|
|
|


