தீர்க்கதரிசனத்தோடு மக்களுக்காக பணியாற்றிவருபவர் டக்ளஸ் தேவானந்தா – தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம்

Monday, May 9th, 2016

தீர்க்கதரிசனத்தோடு மட்டுமல்ல அனுபவங்களுக்கு ஊடாகவும் நடைமுறைச் சாத்தியங்களுக்கு ஊடாகவும் இந்தக் கட்சியை எதிர்காலத்தில் மக்களுக்குரியதான பலமுள்ளதானதாக எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கையில்  இந்த மாநாட்டை நடத்தி முடித்திருக்கின்றார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார

கட்சிக்குப் பலம் சேர்க்க வேண்டியவர்கள் பலர் இன்னும்; வெளியில் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் நாங்கள் எதிர்கொண்ட தேர்தல் முறைகளின் ஊடாக எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் என்பது அதிகப்படியாது.

நாங்கள் யாருடனும் கூட்டுச் சேராமல் சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். எதிர்காலத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருக்கக்கூடிய 2000 கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒருவராவது தெரிவு செய்யப்பட்டு கிராமத்துக்கொருவர் என்ற ரீதியான மாநாடு ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் தயாராக வேண்டுமென நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு என்பதை கட்சி பலமாக அமைக்கப்பட வேண்டும் என்பதை கிராமிய பொதுச்சபை பிரதேச பொதுச்சபை மாவட்ட பொதுச்சபை தேசியகட்சிப் பொதுச்சபை போன்றவை உருவாக்குவதற்கான நிர்வாகக் கட்டமைப்பை செயலாளர் நாயகம் உங்கள் முன்வைத்துள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து வந்திருக்கின்ற தோழர்கள் அனைவரும் கட்சிமீதுள்ள விசுவாசத்துடன் உறுதியாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இதை மேலும் அதிகரிக்கவேண்டும் என்பதே எனது வேண்டுதலாகும்.

மேலும் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஏனைய கட்சிகளைவிட பலமுள்ள கட்சியாக உருவாகும் வகையில் எமது கட்சியை பலமாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் உன கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Related posts: