சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 4th, 2020

இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.

இருப்பினும், இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், குறித்த பரீட்சைகள் 2,648 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

2,77,580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 85,244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது. 2,936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3,31,694 பேர் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் இன்றைய கொரோனா ஊரடங்கு அமுலுக்குப் பின்னர் இதுவரையில் இப் பரீட்சைகள் தொடர்பில் எதுவிதமான அறிவிப்புக்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: