அமெரிக்கா எப்பொழுதும் எமக்குக் கைகொடுக்கும்!- ஜனாதிபதி!

Thursday, September 22nd, 2016

நிலைமாறுகால கட்டத்தில் இருக்கும் இலங்கை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சிறந்த உதாரணமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் நடைபெற்றுவரும் 71ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற மைத்திரிபாலசிறிசேனவிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவருடம், ஓய்வுபெறவுள்ள, ஐநா பொதுச் செயலர் பான்கிமூன், உலகத் தலைவர்களுக்கு அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக விளங்குகிறது என்றும், எப்போதெல்லாம் எமக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்கா எம்முடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டதாக, ஜனாதிபதி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிஜபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியப் பிரதமர் மற்றும் கனேடியப் பிரதமர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார். அத்துடன், ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, ஐநா மனித உரிமைகள் ஆணையகத்துக்கு இலங்கையுடன் எந்தவொரு விரிசலும் இல்லையென அவர் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

09-e1436888118374-1024x648

Related posts: