ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் விசேட சந்திப்பு – இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வு!

Friday, November 17th, 2023

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்ஹை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்விற்கு எதிராக எதிர்க்கட்சி வேட்பாளர் மொஹமட் முய்சு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் நேற்று மாலைதீவு சென்றிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி சோலிஹ் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் அண்மைய பொருளாதார மந்தநிலையிலிருந்து தேசம் எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து விரிவாகப் பேசினர்.

நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

முன்பதாக மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவான இப்ராகிம் முஹமது ஷோலியின் இன்று நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் மாலைதீவு சென்றிருந்தார்.

மாலைதீவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மாலைதீவின் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலி வெற்றிபெற்றிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட மாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.

மாலைதீவில் முன்னேற்றக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முஹமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.

இதனால், இப்ராகிம் முஹமது ஷோலி மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானதுடன் இன்று நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அவர் பதவியேற்றுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர் மாலைத்தீவு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: