பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக துணியினாலான பைகள்!  

Monday, March 27th, 2017

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக துணியிலான பைகளை பயன்படுத்துவதற்காக விசேட விற்பனைத் தொகுதி சாவகச்சேரி பொதுச் சந்தையில் ஏற்படுத்தப்படும் என நகராட்சி மன்ற செயலாளர் கா.சண்முகதாசன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழித்து துணிகளால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவுள்ளோம். எமது பிரதேசத்தில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட பல குடும்பங்கள் வாழ்கின்றார்கள். அவர்களினால் உற்பத்தி செய்யப்படும் துணிப்பைகளை விற்பனை செய்வதற்கு சந்தைத் தொகுதியில் விஷேட விற்பனைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பொலித்தீன் பைகளை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படுத்தப்படும் என நகராட்சி செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பயன்படுத்திய பொலித்தீன் பைகள் மற்றும் வீடுகளில் இருக்கக்கூடிய பொலித்தீன் கழிவுகளை போடுவதற்குரிய கழிவு தொட்டிகள் நகருக்குள் அமைக்கப்படும். நகருக்குள் வருகின்ற பொதுமக்கள் இதற்குள் பொலித்தீன் கழிவுகளை போட்டுவிட்டு துணிப்பைகளை வாங்கி பயன்படுத்த முடியும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி மன்ற செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: