டீசலை பெற்று அதிக விலைக்கு விற்கும் தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Saturday, July 30th, 2022

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்களில் டீசலை பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடாமல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை உடனடியான இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுபோக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக நெருக்கடியான சூழ்நிலையிலும் தனியார் பேரூந்துகளுக்கு போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கள் ஊடாக டீசல் விநியோகிக்கப்படுகின்றன.

நாளாந்தம் 5000 அதிகமான பேரூந்துகளுக்கு டிபோக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், அவற்றில் 70 சதவீதமான பேருந்துகள் மாத்திரமே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன.

பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருளை பேரூந்து உரிமையாளர்கள் அதிக விலைக்கு விற்கும் வியாபாரத்தில் ஈடுப்படுவதை அவதானிக்க முடிகிறது என போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

டிபோக்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொண்டு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படாமல்,எரிபொருளை அதிக விலைக்கும் விற்பனை செய்யும் பேரூந்து உரிமையாளர்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அரச பேருந்து சேவையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் 40 பேரூந்துகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதிமுதல் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: