இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களும் உடன் இரத்து – ஜனாதிபதி !
Monday, January 15th, 2018
மதுபாவனை தொடர்பில் கடந்த தினம் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை உடன் ரத்துச் செய்ய, தாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மதுகம – அகலவத்த பிரதேசத்தில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமு; போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்ட அனுமதிபெற்ற மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் தொழில்புரிவதற்கும், அவற்றைய கொள்வனவு செய்யவும் பெண்களுக்கு இருந்த தடை கடந்த புதன் கிழமையில் இருந்து நீக்கப்பட்டது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மதுபானத்தை கொள்வனவு செய்யவும், சட்ட அனுமதிப் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் தொழில்புரியவும் அனுமதிக்கப்பட்டது.
இதேவேளை மதுபானசாலைகளை திறக்கும் மற்றும் மூடும் நேரங்களை சீர்திருத்தி மதுவரி கட்டளை சட்டத்தின் கீழ் புதிய வர்த்தமானி பத்திரம் ஒன்று கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைய வெளிநாட்டு மதுபான சாலைகள், சுற்றுலா சபையின் அங்கீகாரமில்லா விருந்தகங்கள், திரையங்கு அனுமதிபத்திரம் கொண்ட நிலையங்கள் சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 17 அனுமதிபத்திரங்களுக்காக இந்த வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டது.
புதிய சீர்த்திருத்திற்கமைய, வெளிநாட்டு மதுபானசாலைகள், முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரையும், மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களையும் உடன் ரத்துச் செய்ய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


