இந்தியாவில் இருந்து மீள்குடியேறிய பிள்ளைகளை பள்ளியில் இணைக்க மறுத்துவரும் பிரபல பாடசாலைகள் – பெற்றோர் முறைப்பாடு: அரச அதிபர் அதிர்ச்சி!

Thursday, November 24th, 2016

யாழ்ல் மீள்குடியேறியவர்களின் குடும்பங்களின் பிள்ளைகளை இணைத்துக்கொள்ளும்போது பாடசாலை நிர்வாகத்தினால் வேண்டாமென்று இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றமை தொடர்பாக யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகனிடம் நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் நகரத்திற்கு வெளியில் உள்ள பிரபல்யமான பாடசாலை நிர்வாகத்தினால் செய்யப்படும் இழுத்தடிப்புத் தொடர்பில் அரச அதிபரிடம் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (ஒபர்-சிலோன்) ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து அண்மையில் மீளத் திரும்பியவர்களுக்கும் இந்தியத் துணைத்தூதுவருக்கும் இடையிலான குறைகள் கலந்துரையாடல் நேற்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்தரையாடலுக்க அழைக்கப்பட்ட இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசித்துவரும் தாய் ஒருவரினாலேயே மேற்படி முறைப்பாடும் அரச அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்.நகரத்திற்கு புறம்மான உள்ள பிரபல்யமான மகளிர் பாடசாலை ஒன்றில் இந்தியாவில் இருந்து வந்த தனது பிள்ளையை சேர்ப்பதற்கு தாங்கள் சென்றபோது, வழமையாக எல்லா அரச திணைக்களங்கள், பாடசாலைகளில் கோரும் ஆங்கில மொழியிலான பிறப்புப்பதிவு சான்றிதழ்களை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். ஏன் அதனை ஏற்கமாட்டார்கள் என்று கேட்டபோது, அச்சான்றிதழ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்து கொண்டு வரப்பட்டால் மட்டுமே அதனைச் அச்சான்றிதழை ஏற்றுக்கொள்வோம் என்று அப்பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்து எங்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்றார். அத்தாய் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அரச அதிபர் எங்கும் இல்லாத ஒரு முறையாக இது உள்ளது. இது வேண்டுமென்றே செய்யப்படும் செயலகத்தான் உள்ளது. என்று கூறி மீண்டும் குறித்த பாடசாலையின் பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச அதிபர் தன்னிடம் முறைப்பாடு செய்த தாயாருக்கு உறுதியளித்திருந்தார். மேலும் சில அதிகாரிகள் நேவையை நாடிவரும் பெதுமக்களை வேண்டுமென்ற அலைய விடுகிறார்கள். இவ்விடயங்கள் தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்திருந்நதார்.

vethanayakan-720x480

Related posts: