இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு !
Sunday, December 18th, 2016
இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் தமிழர்களின் தேசிய அடையாளம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிலரின் கடவுச் சீட்டுக்கள் மீளாய்வு செய்யப்பட்டுவருகின்றன. இந்தியாவில் உள்ள திருச்சி கடவுச் சீட்டு பிராந்திய அலுவலகமே குறித்த சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
தங்களது அடையாளத்தை மறைத்து கடவுச் சீட்டு பெற்றுக்கொள்ளும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டு விவகாரம் தொடர்பில் சந்தேகநபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர் என்றும், திருச்சி கடவுச் சீட்டு பிராந்திய அலுவலகம் இந்த தகவலை தொகுத்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
தேசிய அடையாளத்தை மறைத்து கடவுச் சீட்டு பெறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் சிலருக்கு இந்த பிரச்சினை தொடர்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிலர் இது தொடர்பில் விளக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் கடவுச் சீட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
|
|
|


