இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் டொலர் நாணய பண்டமாற்றாக பெற்றது இலங்கை

Monday, March 14th, 2016
400 மில்லியன் டொலரை நாணய பண்டமாற்றாக இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றிருப்பதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசேவ் வங்கி வழங்கும் வசதிமூலம் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வழங்கப்பட்டு நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புக்களில் இது சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை இந்த நாணய பண்டமாற்று நீடிக்க முடியும். 2105 ஆம் ஆண்டு இந்திய ரிசேவ் வங்கியின் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் சங்க உறுப்பு நாடுகளுக்கான வசதியிலிருந்து இலங்கை 400 மில்லியன் டொலரை கடனாக பெற்றிருந்தது.

எனினும் 6 மாதங்களில் அவற்றை திரும்பச் செலுத்தியிருந்தது. இந்த செயற்பாட்டு திட்டத்தின் கீழ் தெற்காசிய நாடுகள் ஒவ்வொன்றும் 100 தொடக்கம் 400 மில்லியன் டொலர் வரை கடன்பெற முடியும். மார்ச் மாதம் 8 ஆம் திகதி இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்து 1.1 பில்லியன் டொலர் நாணய பண்டமாற்று திகதி காலாவதியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் இலங்கையின் மத்திய வங்கிக்கு மற்றொரு 700 மில்லியன் நாணயம் பண்டமாற்றாக வழங்குவதற்கு அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: