அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை போன்று என்னால் பணியாற்ற முடியாது – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Monday, February 15th, 2021

அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததன் பின்னர், அந்த அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணியாற்றுவதனை போன்று, தன்னால் பணியாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்கள் பணிபுரியும் ஆற்றலுள்ள தலைவர்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதி, அனைத்து உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்கள் தொடர்பிலும் புரிந்துணர்வுடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி இவ்வாறு பணியாற்றுகின்றமையினால், நாம் அதிலிருந்து பயனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்த பிரதமர் அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததன் பின்னர், அந்த அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும் தான் நினைப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: