பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக வலிகாமத்தில் வாழைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு

Thursday, May 19th, 2016

யாழ். குடாநாட்டில் கடந்த ஞாயிறு , திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களிலும் தொடர்ச்சியாகப் பெய்த மழை  காரணமாக வலிகாமம் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக வாழைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பிற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் ஏழாலை,குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், ஈவினை போன்ற இடங்களிலும், வலி .கிழக்குப் பிரதேசத்தில் ஊரெழு , உரும்பிராய் , கோப்பாய்,நீர்வேலி , சிறுப்பிட்டி, அச்சுவேலி ஆகிய இடங்களிலும் பல ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழைகள் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக  முறிந்து விழுந்துள்ளன.

இவ்வாறு முறிந்து விழுந்த வாழைகளில் பல இளம் பிஞ்சு வாழைக் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. இதனால் தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 e1772371-858c-421a-be18-49a09f85da6f

Related posts: